ஸ்ரீவைகுண்டம்தாமிரபரணி ஆற்றில்காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு:கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு


ஸ்ரீவைகுண்டம்தாமிரபரணி ஆற்றில்காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு:கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம்தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கல் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள பகுதியை கலெக்டர் ெசந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

காணும் பொங்கல்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கு கீழ் பகுதியில் மணல் பாங்கான இடத்தில் கடந்த காலங்களில் சுற்றுவட்டார பகுதி மக்கள் காணும் பொங்கல் அன்று குடும்பத்தோடு வந்து விளையாடி மகிழ்வார்கள். காலப்போக்கில் அணையின் கீழ் பகுதியில் கருவேல மரங்கள் அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றிற்கு வந்து பொது மக்கள் காணும் பொங்கலை கொண்டாடுவது தடைபட்டு இருந்தது. அந்த பகுதியில் மீண்டும் காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யுமாறு சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு அந்த பகுதியில் சுற்றுவட்டார மக்கள் காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மற்றும் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோரின் ஏற்பாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இது சுற்றுவட்டார பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இப்பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். விரைவாக பணியை முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் மற்றும் பல்வேறுகட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.


Next Story