சுண்டங்கோட்டையில் மினி மாரத்தான் ஓட்டம்


சுண்டங்கோட்டையில்  மினி மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுண்டங்கோட்டையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளக்குறிச்சி ஊராட்சி மன்றம் சார்பில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாரத்தான் ஓட்டத்தை ஊராட்சி மன்றத் தலைவர் ரா. சித்ராங்கதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்து எடுத்துரைத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டார்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.


Next Story