தாமரைப்பாளையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்


தாமரைப்பாளையத்தில்  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்
x

தாமரைப்பாளையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அடையாள அட்டை, இலவச பஸ் மற்றும் ரெயில் பாஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகளுக்கான மருத்துவ அறுவை சிகிச்சை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டன.

இதில் மாவட்ட உள்ளடங்கிய கல்வி உட்கூறு ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேன்மொழி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story