தமிழ்நாட்டில், 7 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழ்நாட்டில், 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 6 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவார்கள். சென்னை, செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி, மதுரை, சேலம் மற்றும் தூத்துக்குடியில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல நேற்று உயிரிழப்பும் இல்லை.

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். 58 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.


Next Story