தமிழகத்திலுள்ளகடற்கரையில் ஒரு கோடி பனைவிதைகள் நடவு செய்யப்படும்:எர்ணாவூர் நாராயணன் தகவல்


தமிழகத்திலுள்ளகடற்கரையில் ஒரு கோடி பனைவிதைகள் நடவு செய்யப்படும்:எர்ணாவூர் நாராயணன் தகவல்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலுள்ள கடற்கரையில் ஒரு கோடி பனைவிதைகள் நடவு செய்யப்படும் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தமிழகத்திலுள்ள கடற்கரையில் ஒருகோடி பனைவிதைகள் நடவு ெசய்யப்படும் என்று தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரச் செயலாளர் உதயசூரியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

ஒருகோடி பனைவிதைகள்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதைகள் நடப்பட உள்ளன. இதனை வருகிற 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த பணியில் நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இது தவிர வாரிய உறுப்பினர்கள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 165 கிலோ மீட்டர் தூர கடற்கரையில் 15 லட்சம் விதைகளை நட உள்ளோம், என்றார்.


Next Story