தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை- முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தகவல்


தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை-  முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தகவல்
x

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்து உள்ளார்.

நீலகிரி

குன்னூர்


தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்து உள்ளார்.

திறப்பு விழா

நீலகிரி மாவட்டம் குன்னுார் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறையில் உள்ள குப்பை மேலாண்மை பூங்காவில் தரம் பிரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பைகளை நவீன முறையில் இயற்கை உரமாக பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குன்னூரில் பெறப்படும் அனைத்து கழிவுகளும், சிறந்த முறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள்

குறிப்பாக, மக்கும் கழிவுகளில் தயாரிக்கப்படும் கார்பன் அதிகம் கொண்ட இயற்கை உரம் மண்ணுக்கு ஊட்டச்சத்து கிடைக்க காரணமாக உள்ளது. அழிந்த வனம் சார்ந்த இடங்களில் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தினால் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ரூ.64 கோடி மதிப்பில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கழிவுகள் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய சுப்ரியா சாகு அவர்களை வெகுவாக பாராட்டினார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் மோனிகா ரானா, நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story