தமிழகத்தில் சொத்துவரியை குறைக்க கோரிக்கை


தமிழகத்தில்  சொத்துவரியை குறைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சொத்துவரியை குறைக்க தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவனர் தலைவர் சந்திரன் ஜெயபால் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக மக்கள் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு சொத்து வரியை இருமடங்காக உயர்த்தி உள்ளது. இதனை குறைத்து, கடந்த ஆண்டு வரியுடன் 10 சதவீதம் வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் விட்டு உபயோக மின்சாரத்துக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கணக்கீடு செய்யப்படுவதை மாற்றி, பிற மாநிலங்களில் உள்ளது போன்று வீட்டு உபயோகத்துக்கு 300 யூனிட் இலவசமாக கணக்கீடு செய்ய அரசு நடடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை நவீன பாதுகாப்போடு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற உத்தரவாதத்துடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் வணிகர்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட தலைவர் தாளமுத்து, பொருளாளர் முத்து, துணைத்தலைவர் எபனேசர் எபி, மாநகர தலைவர் லிங்கசெல்வன், நெல்லை மாவட்ட தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story