"டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம்" - அமைச்சர் முத்துசாமி அதிரடி


டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் - அமைச்சர் முத்துசாமி அதிரடி
x

"டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-

மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம், பணிமாறுதல் மேற்கொள்ளப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அதிக புகார் வந்தால் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது.

மதுக்கடையில் வியாபாரம் அதிகமாவது பெருமை இல்லை; குறையவேண்டும் என நினைக்கிறோம். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படும் விவகாரங்களில் புகாரின் தீவிரத்தை பொறுத்து பணி மாறுதலோ செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்,


Next Story