தென்காசியில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி

தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் மணிச்செல்வன் (வயது 25). செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அநஞ்சகுட்டி மகன் மணிகண்டன் (25). இவர்கள் இருவரும் தென்காசி பகுதியில் 4 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தென்காசி போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், மணிச்செல்வன், மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தார்.


Next Story