தகட்டூரில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தகட்டூரில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் தபால் நிலையம் எதிரே அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேசன், விவசாய சங்க ஒன்றிய பொறுப்பாளர் செங்குட்டுவன், மாவட்ட குழு உறுப்பினர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story