தஞ்சையில், பெண்களுக்கு விளையாட்டு போட்டி
தஞ்சையில், பெண்களுக்கு விளையாட்டு போட்டி
தஞ்சையில் மகளிர் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகள்
பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் சாதனைகளைக்குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதேபோல் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி பெண்களின் நல்வாழ்வுக்கு விளையாட்டு, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி பங்களிக்கிறது என்றும் இது சம்பந்தமாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகயில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வயதினருக்கும் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றது.
தடகளம்- கிரிக்கெட்
தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கின. இதில் மாவட்ட அளவிலான மகளிருக்கான தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.
போட்டியினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வருகிற 25-ந்தேதி வரை போட்டிகள் நடத்தப்படுகிறது. வருகிற 15-ந்தேதி மகளிருக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும், 18-ந்தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
தொடக்க விழாவில் பயிற்சியாளர்கள் நீலவேணி, தாரணி, ரஞ்சித்குமார், விளையாட்டுப் பிரிவு பயிற்றுனர்கள், விளையாட்டு வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடைப்பந்து பயிற்சியாளர் பாபு நன்றி கூறினார்.