டாக்டர் இல்லாததால் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு


டாக்டர் இல்லாததால்  அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு
x

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்

தேனி

உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 72 படுக்கை வசதி உள்ளது. இங்கு மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்தே கர்ப்பிணிகளுக்கு பிரசவ சிகிச்சை அளி்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மகப்பேறு டாக்டர் இல்லை. இதனால் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிகளை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு பெண் டாக்டர்ரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story