ஆண்டிப்பட்டியில்பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து


ஆண்டிப்பட்டியில்பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தேனி

ஆண்டிப்பட்டி நகரில் வேலப்பர் கோவில் சாலையில் பழைய இரும்பு கடை ஒன்று உள்ளது. நேற்று மதியம் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் பூட்டி இருந்த கடையில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிதுநேரத்தில் கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கடையின் உள்ளே எளிதில் தீப்பற்றக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

மேலும் தீவிபத்து ஏற்பட்ட கடையின் அருகில் பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் குடியிருப்புகள் இருந்ததால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவானது. கடையில் பற்றி எரிந்த தீயினால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story