ஆண்டிப்பட்டியில்தூய்மைக்கான விழிப்புணர்வு ஊர்வலம்


ஆண்டிப்பட்டியில்தூய்மைக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனி

ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம், நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், தூய்மைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பொன்சந்திரகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் கொண்டமநாயக்கன்பட்டி தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று தெப்பம்பட்டி சாலை பிரிவு வரை நடைபெற்றது. ஊர்வலத்தின்போது, பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும், கண்ட இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர். மேலும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story