ஆண்டிப்பட்டியில்2-வது நாளாக நெசவு தொழிலாளர்கள் போராட்டம்


ஆண்டிப்பட்டியில்2-வது நாளாக நெசவு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் 2-வது நாளாக நெசவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள 30 விசைத்தறிக்கூடங்கள் மூலம் காட்டன் ரக சேலைகள் மற்றும் பேன்சிரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தி எந்தவித புதிய ஒப்பந்தமும் போடப்படவில்லை. இதற்கிடையே 50 சதவீத சம்பள உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் நேற்றும் 2-வது நாளாக நீடித்தது. இதையடுத்து விசைத்தறி கூடங்கள் இயங்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதன் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதைச்சார்ந்த நூல், பாவு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story