ஏரல் தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு
ஏரல் தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் யார்? இறந்தது எப்படி? என் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் நேற்று தண்ணீரில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. அவர் காவி வேட்டி அணிந்திருந்தார். இதுகுறித்து சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கற்பக ஜோதி அளித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஜெயசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆண்பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் அவர்? இறந்தது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story