வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில்தி.மு.க.வினரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி


வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில்தி.மு.க.வினரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி
x

வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரிய தி.மு.க.வினர் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை


வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரிய தி.மு.க.வினர் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வருமானவரி சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் 15 பேர் கரூர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர். அதனை ரத்து செய்யக்கோரி வருமானவரி அதிகாரிகள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

சரண்

இந்த வழக்கை கடந்த மாதம் 28-ந் தேதி விசாரித்த நீதிபதி இளங்கோவன், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டோருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ததுடன், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், அங்கு அவர்கள் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுக்களை கரூர் நீதிமன்றம் முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டு இருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கில் பால்ராஜ், லாரன்ஸ், விக்னேஷ், சதீஷ்குமார், கனகராஜ், கிருஷ்ணன், செல்வம், ரூபேஸ், அருண், ஜோதிபாசு, பூபதி, குணசேகரன், தங்கவேல், பாலசுப்பிரமணியன், அய்யனார் ஆகியோர் கடந்த 31-ந் தேதி கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்த 15 பேரும் ஜாமீன் கோரி ஏற்கனவே கரூர் கோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆகின. இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story