அன்பின்நகரத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா
அன்பின்நகரத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ள நடை பயணத்தை சிறப்பிக்கும் வகையில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய காங்கிரஸ் சார்பில் அன்பின்நகரத்தில் கட்சி கொடியேற்றுவிழா நடைபெற்றது. ஒன்றிய பொதுச்செயலர் ஜேம்ஸ் அகஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், யூனியன் கவுன்சிலர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு வட்டாரத் தலைவர் லூர்துமணி வரவேற்றார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதில், பேய்க்குளம் டாக்டர் ரமேஷ் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார இளைஞர் காங்கிரஸ் செயலர் ரெக்ஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story