போடியில் வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம்


போடியில்  வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம்
x

போடி வட்டார அளவில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது

தேனி

போடி வட்டார அளவில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த மேலாளர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொண்டனர். வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், புதிய தொழில் தொடங்க தொழில் முனைவோர்களிடம் இருந்து வந்த மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story