தருவைகுளத்தில்வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது: மீனவர்கள் கோரிக்கை
தருவைகுளத்தில் வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்ைக மனு கொடுத்தனர்.
தருவைகுளத்தில் வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்ைக மனு கொடுத்தனர்.
மீனவர் சங்கம்
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ், தருவைகுளம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்துராஜ் ஆகியோர் தலைமையில் மீனவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு அவர்கள் தனித்தனியாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நாங்கள் தருவைகுளத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். எங்கள் ஊரில் 250 விசைப்படகுகளும், 150 சிறிய நாட்டுப்படகுகளும் உள்ளன. எங்கள் ஊரில் 200 மீட்டரில் சிறிய மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இதனை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.
வெளியூர் படகுகளை அனுமதிக்க கூடாது
இந்த நிலையில் வெளியூர் படகுகள் தருவைகுளத்தில் மீன்களை இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் வெளியூர் படகுகள் தருவைகுளத்துக்கு வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஆகையால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கண்டித்து, பிரச்சினை இல்லாமல் எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.