மாவட்டத்தில்நீதித்துறை சமரச மையங்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்;முதன்மை நீதிபதி முருகேசன் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்ட நீதித்துறை சமரச மையங்கள் சார்பில் நடந்து வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட நீதித்துறை சமரச மையங்கள் சார்பில் நடந்து வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.
சமரச முறையில்...
ஈரோடு மாவட்ட நீதித்துறை சமரச மையங்கள் அனைத்து கோர்ட்டுகளிலும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சமரச மையங்கள் மூலமாக வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படுகின்றன. இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்கவும், கால விரயத்தை தடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமரச வார விழா கொண்டாடப்படுகிறது.
விழிப்புணர்வு
இதையொட்டி ஈரோடு காலேஜ் ஆப் லா (சட்டக்கல்லூரி) வளாகத்தில் சமரச மைய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சி.எம்.சரவணன், மாவட்ட சமரச மைய ஆலோசகர் வக்கீல் பி.பாக்கியலட்சுமி உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் கஜேந்திரராஜ் வரவேற்றார். முடிவில் ஈரோடு சமரச மைய செயலாளரும், நீதிபதியுமான ஏ.சண்முகப்பிரியா நன்றி கூறினார்.