மாவட்டத்தில்சிறப்பாக பணியாற்றிய 138 போலீசாருக்கு பாராட்டு


மாவட்டத்தில்சிறப்பாக பணியாற்றிய 138 போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 19 Jun 2023 2:44 AM IST (Updated: 19 Jun 2023 6:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 138 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாண்ட போலீசாருக்கும், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும் பாராட்டு விழா ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசினார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட மொத்தம் 138 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story