கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்


கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில்  குளிக்கும் சுற்றுலா பயணிகள்
x

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

ஈரோடு

கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள். மேலும் அங்கு விற்கப்படும் சூடான மீன் வறுவல்களையும் ருசித்து சாப்பிட்டுச் செல்வார்கள். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொடிவேரி அணையில் தண்ணீர் குறைவாக விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிகளுக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீரானது ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதைத்தொடர்ந்து கொடிவேரி அணைக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story