பர்கூர் மலை கிராமத்தில் மக்காச்சோள பயிரை நாசப்படுத்திய காட்டு யானை


பர்கூர் மலை கிராமத்தில் மக்காச்சோள பயிரை நாசப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 10 Jun 2023 1:30 AM IST (Updated: 10 Jun 2023 7:56 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைகிராமத்தில் மக்காச்சோள பயிரை காட்டு யானை நாசப்படுத்தியது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி ஆலனை கிராமத்தை சேர்ந்தவர் அப்பையன். விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 3 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இவருடைய தோட்டம் பர்கூர் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளிேயறிய ஒரு காட்டு யானை மக்காச்சோள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்தி சென்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற அப்பையன் பயிர்கள் நாசமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, 'பர்கூர் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி கிராமத்தில் இருக்கும் தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. சிரமப்பட்டு விளைவித்த பயிர்களை நாசப்படுத்துகின்றன. எனவே வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நாசமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும். மேலும் யானை அடிக்கடி வெளியேறும் வழித்தடங்களில் அகழி அமைக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story