இலுப்பையூரணியில்புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு


இலுப்பையூரணியில்புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பையூரணியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன்திறந்துவைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

இலுப்பையூரணி பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் சுபம் ஞானதேவ் ராவ், பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், கோவில்பட்டி நகரசபை தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான கா. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதா கிருஷ்ணன், மாநில பொது குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Next Story