கடமலை-மயிலை ஒன்றியத்தில் செண்டுமல்லி பூ விலை வீழ்ச்சி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேனி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் குமணன்தொழு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் செண்டு மல்லி பூ சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் செண்டுமல்லி பூ விளைச்சல் குறைந்தது. மேலும் சந்தைகளில் 1 கிலோ செண்டு மல்லி பூ ரூ.40 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் மற்றும் சரசுவதி, ஆயுத பூஜை பண்டிகைகளின் போது செண்டுமல்லி பூவின் விலை பல மடங்கு அதிகரித்து காணப்படும். ஆனால் நடைபெற்று முடிந்த ஓணம் பண்டிகையின் போது கேரளாவிற்கு அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதி ஆகவில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் நடைபெற உள்ள சரசுவதி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையின்போது பூவின் விலை அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story