கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் விளைச்சல் அமோகம்: மூட்டை ரூ.1,350-க்கு விற்பனை


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்  நெல் விளைச்சல் அமோகம்:   மூட்டை ரூ.1,350-க்கு விற்பனை
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்பில் தொடங்கி பழனி செட்டிபட்டி வரை உள்ள பகுதிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாகும். இங்கு சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. முதல் போக விவசாயத்துக்கு ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பொய்த்து போனதால் முதல் போகம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்தது.

இதைத் தொடர்ந்து முதல் போக விவசாய பணிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் நெல் விவசாயம் நடைபெற்றது. கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை பொறுத்த வரையில் 606 ரக நெல் 62 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1250-க்கும், ஆர்.என்.ஆர். ரக நெல் மூட்டை ரூ.1350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.


Next Story