குமரியில் கடந்த 2 நாட்களில் 134 பேருக்கு கொரோனா


குமரியில் கடந்த 2 நாட்களில்  134 பேருக்கு கொரோனா
x

குமரியில் கடந்த 2 நாட்களில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் கடந்த 2 நாட்களில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் தொற்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் 991 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 70 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. நேற்று 658 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 64 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனாவால் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று பாதித்த அனைவரும் ஆஸ்பத்திரி மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story