ஊட்டியில் புதிய கோர்ட்டில் பெண் வக்கீல்கள் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு


ஊட்டியில் புதிய கோர்ட்டில் பெண் வக்கீல்கள் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:45 PM GMT)

ஊட்டி கோர்ட்டில் பெண் வக்கீல்கள் அறை திடீரென்று பூட்டி சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி கோர்ட்டில் பெண் வக்கீல்கள் அறை திடீரென்று பூட்டி சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால், பழைய கோர்ட்டு அலுவலகம் மிகவும் பழுதானது. இதனால் காக்காதோப்பு பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு சாலை, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி வக்கீல்கள் புதிய கோர்ட்டுக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

மேலும் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் வக்கீல்கள் கோர்ட்டுக்கு சென்றனர்.

இந்தநிலையில் நீலகிரி மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வேலுமணி மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த வாரம் ஊட்டி வந்து புதிய கோர்ட்டு வளாகத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறை கண்டறியப்பட்டு, அந்த அறையை நீலகிரி மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வேலுமணி மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

சீல் வைப்பு

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெண் வக்கீல்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், பெண் வக்கீல்கள் நேற்று புதிய கோர்ட்டு வளாகத்தில் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- புதிய நீதிமன்ற வளாகத்தி்ல போதிய வசதிகள் இல்லை என கூறி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டோம். தலைமை நீதிபதியிடம் முறையிட்டோம். அதன் பின்னர் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நீதிபதி திடீரென நேற்று இரவு அந்த அறையை பூட்டி சீல் வைத்துள்ளார். எனவே மாவட்ட நீதிபதியிடம் அறையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளாம். மேலும், தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளோம். மாவட்ட நீதிபதி பெண் வக்கீல்களை அவ மரியாதையாக இழிவுப்படுத்தி பேசுகிறார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story