குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது38). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் காளிதாஸ் குடிபழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காளிதாஸ் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story