கலெக்டர் அலுவலகத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான குழு கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குழு கூட்டம் நடந்தது.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு, சம உரிமை, செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடனான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண்ணிக்கை, அரசு திட்டங்களின் கீழ் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை, சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்பட்ட விவரம் உள்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story