தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடந்து வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தலைமையிட கூடுதல் பேலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். நேற்று 64 பேர் பல்வேறு புகார்களை தெரிவித்து மனுக்களை கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அழைத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story