போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் மனு அளிக்க புகார் பெட்டி


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் மனு அளிக்க புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Jan 2023 1:00 AM IST (Updated: 29 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் புகார் பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே புகார் அளிக்க வந்த பொதுமக்கள் அந்த புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றார்கள்.


Next Story