போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடக்கிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 24 பேர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட போலீசாரை அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story