நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்:அர்ஜூன் சம்பத் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ராமநவமியை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமர் பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். மகாத்மா காந்தி கனவான ராமராஜ்யம் அமைக்கும் பணியை பிரதமர் மோடி செய்து வருகிறார். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், பா.ஜனதா வெற்றி பெற்று இந்த பணியை தொடர்ந்து செயல்படுத்தும். தமிழகத்திலும் விரைவில் ராமராஜ்யம் அமையும்.
தூத்துக்குடியில் வருகிற 1, 2-ந் தேதிகளில் சனாதன இந்து தர்ம மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு உரிய அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்த வழக்கில் வெற்றிபெற்று, மாநாட்டை நடத்துவோம், என்று கூறினார