பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் ரூ.1¾ கோடி ஒதுக்கீடு

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் ரூ.1¾ கோடி ஒதுக்கீடு
x

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டாரத்துக்கு ரூ.1¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் வினோதா கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டாரத்துக்கு ரூ.1¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் வினோதா கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நுண்ணீர் பாசன திட்டம்

தோட்டக் கலைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் 2023-24-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன வசதி அமைத்து கொடுப்பதற்கு தோட்டக் கலைத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பாண்டில் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்துக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அணுகலாம்

திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், போட்டோ, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, நில வரைபடம், (எப்.எம்.பி.) சிறு குறு விவசாயிகள் சான்று போன்ற ஆவணங்களுடன் தோட்டக்கலை உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story