சோலைக்குடியிருப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க நிகழ்ச்சி


சோலைக்குடியிருப்பில்  புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க நிகழ்ச்சி
x

சோலைக்குடியிருப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி யூனியன் குதிரைமொழி ஊராட்சி சோலைக்குடியிருப்பில், புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை வகித்து புதிய டிரான்ஸ்பார்மரின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் உதவி மின் பொறியாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, ஒன்றிய துணைச்செயலாளர் சுடலைக்கண், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முகமது நூர் பாய்ஸ், ஒன்றிய தகவல்தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story