மாநில கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வெற்றி
மாநில கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி
மாநில அளவிலான கராத்தே போட்டிகள் விருதுநகரில் நடந்தன. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மங்களகிரி செயின்ட்ஜோசப் பள்ளி, குறுக்குச்சாலை இந்து தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தூத்துக்குடி மாணவ, மாணவிகள் சிறப்பாக விளைாடி வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆ.சுடலைமணி, வெள்ளையராஜா, முத்துபிரசாத், ரத்தினகுமார் ஆகியோரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story