மாநில அளவிலான கராத்தே போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை
மாநில அளவிலான கராத்தே போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
சென்னையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் சுடலை ராஜமணி பங்கேற்று கட்டா பிரிவில் 2-வது இடத்தையும், குமிட்டி பிரிவில் 3-வது இடத்தையும் பிடித்தார்.
சாதனை படைத்த மாணவரை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story