சுப்ரீம் கோர்ட்டில்ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்;கோபியில் புகழேந்தி பேட்டி


சுப்ரீம் கோர்ட்டில்ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்;கோபியில் புகழேந்தி பேட்டி
x

சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று கோபியில் புகழேந்தி கூறினாா்.

ஈரோடு

கடத்தூர்

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை வகிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு தற்போது பொதுச்செயலாளர் பதவியை அடைய எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தி வருகிறார்.

பெரிய தலைவராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அருகில் இருந்தவர் தற்போது எடப்பாடி பழனிசாமி பின்னாடி செல்வது வேதனையாக உள்ளது.

மாற்று கட்சியினர் மதிக்ககூடிய இடத்தில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க.வுக்கு செல்ல முக்கிய காரணம் கே.ஏ.செங்கோட்டையன் தான்.

வருகிற 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமை ஏற்று எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்தால் மட்டுமே அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும்.

சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வரும்.

எந்த கட்சியாக இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமை ஏற்று வந்தால் மட்டுமே அந்த கூட்டணி வெற்றி பெற முடியும்.

அ.தி.மு.க.வை உடைக்க பல்வேறு சதிகள் நடந்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.வை ஒன்றிணைய பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story