கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும், இலுப்பையூரணி ெரயில்வே கேட்டிற்கும் இடையே முதியவர் ெரயிலின் அடிபட்டு பிணமாக கிடப்பதாக தூத்துக்குடியில் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மபெருமாள், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்தவர் புது கிராமம் சிந்தாமணி நகரை சேர்ந்த ராமசாமி (வயது 65) என்பது தெரிய வந்தது. இவர் மனைவி மகமாயி இறந்து விட்டார். 3 மகன்கள் உள்ளனர். ராமசாமி கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சிந்தாமணி நகர் பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற பயணிகள் ரெயிலில் அடிபட்டு ராமசாமி இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story