புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில்களில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில்களில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x

உண்டியல் பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனா்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில்களில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

உண்டியல்கள் உடைப்பு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையம் அய்யாகோவில் மற்றும் காவிலிபாளையம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் கடந்த வாரம் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து 2 கோவில்களின் நிர்வாகிகளும் அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்

விசாரணை

இந்தநிலையில் நேற்று அதிகாலை புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நொச்சிக்குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

3 சிறுவர்கள்

விசாரணையில், அவர்கள் குட்டைக்காடு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 19) மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் என்பதும், அவர்கள்தான் ஓலப்பாளையம் அய்யாகோவில் மற்றும் காவிலிபாளையம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சுந்தரமூர்த்தியை கோபி மாவட்ட சிறைக்கு கொண்டு சென்றனர். 3 சிறுவர்களும் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story