கோவில்பட்டியில் மனைவியை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்?:பரபரப்பு தகவல்


கோவில்பட்டியில்  மனைவியை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்?:பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மனைவியை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்? என்பதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மனைவியை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தம்பதி பிணம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோடு பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 41), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரணி செல்வி (39). இவர்களுக்கு மனோஜ் (18) என்ற மகனும், உமா மகேஸ்வரி (14) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் பூட்டிய வீட்டிற்குள் ராஜபாண்டியும், பரணி செல்வியும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு தகவல்

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ராஜபாண்டி புதிய வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி கத்தியால் தனது மனைவி பரணி செல்வியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உடல் ஒப்படைப்பு

இதற்கிடையே, 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

------------


Next Story