போடியில்சாக்கு குடோனில் பற்றி எரிந்த தீ
போடியல் சாக்கு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தேனி
போடி வேட்டவராயன் கோவில் அருகே போடி கூட்டுறவு சங்கத்திற்க்கு சொந்தமான பழைய காப்பி குடோன் உள்ளது. அங்கு தற்போது காலி சாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த குடோனில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென பற்றி எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சுமார் 4 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் குடோனில் இருந்த சாக்குகள் எரிந்து சாம்பலாகின. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story