வர்த்தகரெட்டிபட்டி பகுதியில்பொங்கல் விளையாட்டு விழா
வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
வர்த்தகரெட்டிபட்டி:
தூத்துக்குடி மாவட்டம் வர்த்தகரெட்டிபட்டி அருகே உள்ள வ.பாண்டியாபுரத்தில் 7-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா போட்டிகள் நடந்தன. இதில் பலூன் உடைத்தல், பம்பரம் விடுதல், சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல், கிரிக்கெட், கைப்பந்து, கபடி, மினி மாரத்தான் ஓட்டம், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story