தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு
தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பொன்-உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதம்மாள் என்ற சின்னப்பிள்ளை (வயது 93). இவர் வயது முதிர்வினால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன் (56) செய்து வந்தார். மேலும் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்த நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பழனியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நேற்று தாய்-மகனுக்கும் இடுகாட்டில் அடுத்தடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாய் இறந்த சோகத்தில் மகனும் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story