உடன்குடி பகுதியில் சீரான மின்வினியோகத்திற்கு நடவடிக்கை
உடன்குடி பகுதியில் சீரான மின்வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் சீரான மின்வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
உடன்குடி உபமின்நிலைய வளாகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் படுக்கப்பத்து, நடுவகுறிச்சி, பெரியதாழை, கொம்மட்டிக்கோட்டை, புத்தன் தருவை, வெங்கட்ராமானுஜபுரம், குலசேகரபட்டினம் பகுதி பொதுமக்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அவர்கள் பேசுகையில், இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சீரான மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்பழுதுகளை உடனுக்குடன் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சீரான மின்சாரம்
இதற்கு பதிலளித்து, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சீரான மின்சாரம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி மின்வாரிய அலுவலக களப்பணியாளர்கள் நுகர்வோர் குறைகூறாத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும், என்றார்.
கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில் திருச்செந்தூர் மின்விநி யோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயக்குமார், முத்துகிருஷ்ணன், ரவீந்திரகுமார், ரோஸ்லின்கிரேஸ், உடன்குடி ராம் மகாலிங்கம் உதவி பொறியாளர்கள் வேலாயுதம், ராஜேஷ், கலைக்கண்ணன், உதவி நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து மின்வாரிய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.