உடன்குடி யூனியன் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு


உடன்குடி  யூனியன் கூட்டத்தில்  அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

உடன்குடி யூனியன் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது. யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மீரா சீராசுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன், முருங்கை மகாராஜா (அ.தி.மு.க.) பேசுகையில், கடந்த 3 வருடங்களாக எந்த மக்கள் நலத்திட்டப் பணிகளும் நடைபெறவில்லை, என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய முருகேஸ்வரி (அ.தி.மு.க.), கடந்த சில மாதங்களுக்கு முன்பே யூனியன் கூட்டத்தில் தெரிவித்தும் தசரா திருவிழா தொடங்கவுள்ள நிலையில் குலசேகரன்பட்டினத்திலுள்ள அனைத்து ரோடுகளும் மராமத்து செய்யப்படாமல் உள்ளது. இஇதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்கள். இதை கண்டிக்கிறேன்,என்றார். இதை தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, முருகேஸ்வரி, ஜெயகமலா, செல்வன், தி.மு.க., கவுன்சிலர் செந்தில் ஆகியோர், கடந்த 2வருடங்களாக எந்த திட்டப் பணியும் செய்யாத யூனியன் நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செயதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கூட்டத்தில் யூனியன் தலைவர் பேசுகையில்

கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி குலசை திருவிழாவுக்கு ரோடுகளை சீரமைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.


Next Story