உடன்குடியில் விதவை பெண்ணுக்கு ரூ.1½ லட்சம் நிதியுதவி


உடன்குடியில்  விதவை பெண்ணுக்கு ரூ.1½ லட்சம் நிதியுதவி
x

உடன்குடியில் விதவை பெண்ணுக்கு ரூ.1½ லட்சம் நிதியுதவியை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வழங்கினார்.

தூத்துக்குடி

உடன்குடி:

திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலு மூலை கிணறு பகுதியை சார்ந்த ஜெயா என்பவருடைய கணவர் கடந்த 2021-ல் இறந்துவிட்டார். இவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜவாஹிருல்லா உடன்குடியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.1½ லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் நோலாஸ்கோ, மாவட்ட தலைவர் ஆசாத் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஐப்ரோஸ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொன்டனர்.


Next Story