இடைசெவல் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்


இடைசெவல் கிராமத்தில்  மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இடைசெவல் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் பாதிப்பு உள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல், இளையரச நேந்தல், நக்கல முத்தன்பட்டி கிராம பகுதிகளில் நடப்பு பருவத்தில் ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களில் படைப்புழு தாக்குதல் இருக்கிறதா? என கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஆல்வின், தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக உதவி இயக்குனர் கண்ணன், கோவில்பட்டி உதவி வேளாண்மை இயக்குனர் நாகராஜ் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இடைசெவல கிராமத்தில் மக்காச்சோள பயிரின் குருத்துப்பகுதியில் படைப்புழு தாக்குதல் இருப்பதால், உடனடியாக மருந்து தெளித்து கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதாவது, கைத்தெளிப்பான் மூலம் 10 லிட்டர் தண்ணீருக்கு எமா மெக்டீன் பென் சோயேட் 4 கிராம் அல்லது நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பினோடோரம் 5 மில்லி என்ற அளவில் கலந்து உடனடியாக தெளித்திட அறிவுரை வழங்கப்பட்டது. பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்திட ட்ரோன்களை வாடகைக்கு பெற்று பயன்படுத்திடவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


Next Story